மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில், சேலம் மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி, பாவேந்தன் நாவரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து!