ETV Bharat / state

ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்ச்சி - பங்கேற்காதது குறித்து விசிக விளக்கம்! - salem district news

ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck leder thirumavalavan press meet in salem

author img

By

Published : Sep 18, 2021, 4:51 PM IST

Updated : Sep 18, 2021, 5:18 PM IST

சேலம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சேலம் வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு, வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெறக் கூடிய இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இது அமைதிவழி போராட்டம்.

ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம்

தமிழ்நாடு ஆளுநருராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தான் அவரது நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தோம். ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை.

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல்

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது. இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்போ, விமர்சனமோ அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டனத்திற்குரியது.

விசிக விளக்கம்

திமுக சமூக நீதி அரசு

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது" எனக் கூறினார்.

இதையும் படிங்க : பெண் மருத்துவரின் உயிரை காவு வாங்கிய சுரங்கப் பாதை!

Last Updated : Sep 18, 2021, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.