ETV Bharat / state

விஏஓ சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் அறையை முற்றுகையிட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள்! - vao officers protest in salem

VAO Suspend in Salem: சேலத்தில் கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்ததை வாபஸ் பெற வலியுறுத்தி, மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்று திரண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலத்தில் விஏஓ சஸ்பெண்ட்
சேலத்தில் விஏஓ சஸ்பெண்ட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:51 PM IST

சேலத்தில் விஏஓ சஸ்பெண்ட்

சேலம்: கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. அதில் மக்களிடம் மனுக்கள் பெறவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், 10 அடி நீள அகலத்தில், இரண்டு அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்த அந்த விழாவில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், வீரபாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து, டி.ஆர்.ஓ மேனகா உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக, திமுக மற்றும் அதிமுக கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மேடையில் இருபுறமும் ஏறினர்.

இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. அப்போது நிலைகுலைந்த ஆட்சியர் கார்மேகம் கீழே சரிந்தார். அதனை உணர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஆட்சியர் கைகளைப் பிடித்து தூக்கினார். இதனால் விழாவில் அதிகாரிகளிடையே பதற்றம் நிலவியது. எனினும், அதே மேடையில் விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி வி.ஏ.ஓ. கண்ணனை சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அறை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கண்ணனின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனால் சேலம் மாவட்டத்தில் நிலம் அளவிடும் பணி, குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட அலுவலகப் பணிகள் ஏதும் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: ‘காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது’ - அமைச்சர் ரகுபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.