ETV Bharat / state

திருமாவளவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒத்திவைப்பு! - வன்னிய சங்கம்

வன்னிய சங்கம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு சேலம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Thirumavalavan
திருமாவளவன்
author img

By

Published : Jun 16, 2023, 11:01 AM IST

சேலம்: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியும், வழக்கறிஞர் பாலுவை தரக்குறைவாக பேசி உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.

அதேநேரம், இது தொடர்பாக திருமாவளவனின் பேச்சு வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்போது வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் மு.கார்த்தி, திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நேற்றைய முன்தினம் வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை நேற்று (ஜூன் 15) பிற்பகல் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், இந்த அவதூறு வழக்கினை விசாரிக்கும் நீதிபதி யுவராஜ் முதற்கட்டமாக கார்த்தியின் புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதேபோல், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே வழக்கு தொடுத்த கார்த்தி நீதிமன்றத்திற்கு வர உள்ளதால், 'நமது பலத்தை நிரூபிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் நீதிமன்றத்தில் கூடுமாறு' என அச்சுறுத்தும் வகையில் அதன் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக நேற்று காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், வழக்கறிஞர்கள் ஐயப்ப மணி, பகத்சிங், கண்ணன், குமார் விஜயராஜா ஆகியோர் முன்னிலையாகினர்‌. இதனால் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நீதிமன்றம் வந்திருந்தனர்.

அப்போது, பாமகவினர் மற்றும் வன்னியர் சங்க பிரமுகர்களை நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்க காவல் துறையினர் மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முன்னதாக, மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் இரு தரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அப்போது ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்து கோயிலின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் அவதூறு வழக்கு.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.