சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள கந்தம்பட்டி பட்டியலினத்தவர் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவர் பொதுவழிப் பாதையை வழிமறித்து தடுப்புச் சுவர் கட்டி வருகிறார்.
இதையறிந்த பட்டியலின குடியிருப்பு மக்கள், வெங்கடாசலம் சுவர் கட்டக் கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் "நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவுக்காரர் என்னிடம் யாரும் சுவர் கட்டக்கூடாது என்று கூறவேண்டாம், அப்படித்தான் சுவரை கட்டுவேன்” என்று வெங்கடாசலம் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் பொதுவழிப் பாதையில் சுவர் முழுமையாக எழுப்பப்பட்டால் மக்கள் வெளியே வருவதற்கு கூட இடம் இல்லாமல் ஆகிவிடும், அந்தப் பகுதியில் உள்ள இடத்தை முழுமையாக சர்வே செய்து பட்டியலின மக்கள் செல்லும் வழிப்பாதையை பிரித்து வழங்க வேண்டும், வெங்கடாசலம் சுவரை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி