ETV Bharat / state

வங்கிகள் இணைப்பால் பல்வேறு புதிய பிரச்னைகள்...! - வங்கி அலுவலர்கள் எச்சரிக்கை

சேலம்: பொருளாதாரச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக வங்கிகளை இணைத்து பல்வேறு புதிய பிரச்னைகளை மத்திய அரசு ஏற்படுத்திவருவதாக வங்கி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

union bank
author img

By

Published : Sep 16, 2019, 11:16 AM IST

அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினரின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்கள் சௌமியா தத்தா, நாகராஜன், கே.கே. நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன், “வாடிக்கையாளர்களுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் மட்டுமே சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு இந்திய பொதுத் துறை வங்கிகள் சாட்சியாக உள்ளன. ஆனால், மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க முயல்கிறது.

சேலத்தில் நடைபெற்ற கூட்டம்

அதன் முதல் கட்டமாக பொதுத் துறை வங்கிகள் சிலவற்றை இணைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை வங்கிகள் இணைப்பின் மூலம் ஏற்படுத்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், வங்கிகள் இணைப்பை திரும்பப் பெறக் கோரியும் வரும் 26, 27 ஆகிய இரண்டு தேதிகளில் நாடு முழுவதும் வங்கி அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றார்.

Intro:இந்தியாவில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யூனியன் பேங்க் அதிகாரிகள் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Body:பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு பதிலாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பொதுத்துறை வங்கிகளை இணைத்து பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் ஏற்படுத்துவதாக சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினரின் இரண்டு நாள் மாநில மாநாடு நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று யூனியன் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்கள், சௌமியா தத்தா, நாகராஜன், கே கே நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் அசோசியேஷன் பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில்," வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் மட்டுமே சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு இந்திய பொதுத்துறை வங்கிகள் சாட்சியாக உள்ளன.

இன்னும் கூடுதலாக பொதுத்துறை வங்கிகள் இந்தியாவில் பல்வேறு கிராம பகுதிகளில் தொடங்க வேண்டிய சூழல் உள்ளது .

ஆனால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் படிப்படியாக தனியார்மய வங்கிகளாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அதன் முதல் கட்டமாக பொதுத்துறை வங்கிகள் சிலவற்றை இணைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் ஆகிய பொது மக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை குறைக்கப்படும். சேவை அவர்களுக்கு முழுமையாக சென்று சேராத நிலை ஏற்படும்.

இதேபோல பல்வேறு சிக்கல்களை மத்திய அரசு வங்கிகளில் இணைப்பின் மூலம் ஏற்படுத்தி உள்ளது . இதனை கண்டித்தும் வங்கிகள் இணைப்பை வாபஸ் பெறக் கோரியும் வரும் 26, 27 ஆகிய 2 தேதிகளில் நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் " என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த ஆலோசனை கூட்டத்தில் யூனியன் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.