சேலம்:Video: ஐந்து ரோடு சந்திப்பில் இருந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்லும் பிரதான சாலையில் அழகாபுரம் காவல்நிலையம் உள்ளது. காவல்நிலையம் அருகே ஒரே வளாகத்தில் அமைந்துள்ள மூன்று துணிக்கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இன்று (டிச.26)அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், கடைகளில் இருந்த 1 லட்சத்து 5ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல், அழகாபுரம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மருந்துக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் 24 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக கடையில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் தப்பியது.
கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தும், சிசிடிவி காட்சிப் பதிவை கொண்டும் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவை அழிப்பதே திமுகவின் நோக்கம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்