கன்னங்குறிச்சி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்திலும் மற்றும் ஒரு இன்னோவா காரிலும் தனித் தனி பொட்டலங்களாக 14 பொட்டலங்கல் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அதில் மொத்தம் 14 கிலோ மான்கறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து லட்சுமணன் மற்றும் லோகநாதன் ஆகியோரது வாகனத்தை பறித்துக்கொண்டு இருவரையும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள திருக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று அதிகாலை லோகநாதனின் இருசக்கர வாகனத்தை அயோத்தியாப்பட்டணத்தில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் அவருடைய இன்னோவா காரில் இருவரும் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யபட்டி சென்று அங்குள்ள இரு நபர்களிடம் 14 கிலோ மான் கறி வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.