ETV Bharat / state

கரோனா தொற்றுக்கு இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!

சேலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இரண்டு பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு
பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு
author img

By

Published : May 22, 2021, 9:51 AM IST

சேலம் : கரோனா தொற்று பாதிப்பால் சேலத்தில் அடுத்தடுத்து இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.

நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, எடப்பாடி தாலுகா, தனியார் தொலைக்காட்சி நிருபர் நல்லதம்பி நேற்று (மே.21) கருப்புப் பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், தனியார் பத்திரிக்கை புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த விஜயகுமார் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (மே.21) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது இவர்கள் இருவரின் உயிரிழப்பு சேலம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கருப்புப் பூஞ்சை: அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவ வசதி வேண்டும் - டாக்டர். ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.