ETV Bharat / state

அரசு அலுவலர்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் வசூல் வேட்டை: இருவர் கைது! - மக்களை ஏமாற்றும் நபர்கள்

சேலம்: ஆத்தூர் அருகே அரசு அலுவலர்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் தீபாவளி வசூலில் ஈடுபட்ட போலி நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

fake officers
author img

By

Published : Oct 25, 2019, 4:33 AM IST

Updated : Oct 26, 2019, 7:39 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியில், சங்கர் என்பவர் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் எனக் கூறி அப்பகுதியில் உள்ள அடுமனை (பேக்கரி), உணவகம், மளிகைக்கடை வியாபாரிகளிடம் தீபாவளி வசூலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அரசு அலுவலர்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் வசூல் வேட்டை

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சங்கரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் என்று கூறி ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகளிடம் பணம் வசூலில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் ஆத்தூர் கிளை சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்த கும்பல் கைது

Intro:ஆத்தூர் அருகே உணவுத் துறை பாதுகாப்பு அதிகாரி என மிரட்டி பேக்கரி மற்றும் வியாபாரிகளிடம் தீபாவளி வசூலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.Body:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியில் , கெங்கவல்லி அடுத்த நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவின் மகன் சங்கர் என்பவர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என மிரட்டி அப்பகுதியில் உள்ள பேக்கரி, ஹோட்டல் மற்றும் மளிகை கடை வியாபாரிகளிடம் தீபாவளி வசூலில் ஈடுபடும் போது கையும் களவுமாக ஆத்தூர் புறநகர்
போலீசார் கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த கல்லாநத்தம் கிராமத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச்சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் பணம் வசூலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

இதனையடுத்து இருவரையும் ஆத்தூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். இருவரையும் சிறையிலடைத்தனர் .

Conclusion:
வியாபாரிகளிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என மிரட்டி இருவர் பணம் வசூல் செய்த சம்பவம், ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Oct 26, 2019, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.