ETV Bharat / state

சேலத்தில் இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை

சேலம்: கிராம நிர்வாக அலுவலர், அடையாளம் தெரியாத முதியவர் என 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Nov 29, 2020, 1:27 PM IST

two-commit-suicide-at-two-different-places-in-salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் அருகில் உள்ள புழுதிக்குட்டை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சரவணன்(42). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள மரத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் மீட்டு காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அலட்சியம் காட்டிய காவல்துறை - மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.