ETV Bharat / state

கேரளாவில் கொலை செய்துவிட்டு தமிழ்நாடு வந்த 2 இளைஞர்கள் கைது ! - கொலை செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்த 2 வாலிபர்கள் கைது

சேலம் : கேரள மாநிலத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்த 2 வாலிபர்கள் கைது
author img

By

Published : Aug 23, 2019, 5:26 PM IST

கேரள மாநிலம் காயங்குளத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த காயங்குளம் போலீசார் கொலையில் தொடர்புடைய ஒருவரை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய அஜ்மல் மற்றும் சாகில் ஆகியோரை தேடிவந்தனர்.

இந்நிலையில் தப்பிச் சென்ற இருவரின் செல்போன் சிக்னலை வைத்து இருவரும் எங்கு உள்ளனர் என கேரள போலீசார் கண்காணித்து வந்த நிலையில் அவர்கள் கேரளாவிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணிப்பது தெரிய வந்தது.

உடனடியாக கேரள காவல் துறையினர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம் போலீசாருக்கு கொலையாளிகள் ரயிலில் தப்பி வருவது பற்றி தெரிவித்தனர். விரைந்து செயற்பட்ட சேலம் காவல் துறையினர் கொலையாளிகள் இருவரையும் சேலம் ஜங்சன் காவல் நிலையத்தில் கைதுசெய்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கேரள போலீசார் கொலையாளிகள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

Intro:கேரள மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்த
2 வாலிபர்கள் கைது .
சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசார் கைது செய்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர் .Body:கேரள மாநிலத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டு கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் உள்ளது காயங்குளம் .

இங்கு நேற்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் .இந்த வழக்கை விசாரித்த காயங்குளம் போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்தனர் .

கொலையில் தொடர்புடைய அஜ்மல் மற்றும் சாகில் ஆகியோர் தப்பி சென்று விட்டனர்.

இவர்களது செல்போனை வைத்து இருவரும் எங்கு உள்ளனர்? என கேரள போலீசார் கண்காணித்தனர். அப்போது இருவரும் கேரளாவிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணிப்பது தெரிய வந்தது .

உடனே கேரள காவல்துறையினர் பாலக்காடு ,
கோவை ,
ஈரோடு ,
சேலம் போலீசாருக்கு கொலையாளிகள் ரெயிலில் தப்பி வருவது பற்றி தெரிவித்தனர்.

இதனையடுத்து அனைத்து ரயில்வே போலீசார் கண்காணித்து வந்தனர்.
இதுபோல சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆய்வாளர் இளவரசி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் நேற்று இரவு ரயில்களில் கண்காணித்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து சேலம் வழியே செல்லும் ரயில் வந்தது .
இதில் ஏறி போலீசார் பார்த்தபோது அஜ்மல் மற்றும் சாகில் ரயில் பெட்டி ஒன்றில் அமர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கொலையாளிகள் இருவரும் சிக்கியது குறித்து காயங்குளம் போலீசாருக்கு சேலம் ஜங்சன் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை காயங்குளம் போலீசார் சேலம் வந்து அஜ்மல் மற்றும் சாகிலை அழைத்துச்சென்றனர்.

கொலையாளிகள் இருவரை கைது செய்து ஒப்படைத்த சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாரை கேரள போலீசார் பாராட்டினர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.