ETV Bharat / state

துணிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி: கொலையாளிகள் சரண்

author img

By

Published : Jul 24, 2019, 10:19 AM IST

சேலம் : நங்கவள்ளியில் ஜவுளிக்கடை ஒன்றில் உரிமையாளரை கொலை செய்ய நடந்த முயற்சியில் தேடப்பட்டு வந்த இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகை பகுதியைச் சேர்ந்தவர் வேலுதங்கமணி (33). இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர் நங்கவள்ளியில் ஜவுளிக்கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜவுளிக் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வேலுதங்கமணியை சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேலுதங்கமணியை வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த வேலுதங்கமணி சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலை என்று மருத்துவர்கள் கூறியதால் வேலுதங்கமணி தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி காவல் துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விசாரணை செய்ததில் நங்கவள்ளியைச் சேர்ந்த சதீஷ், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது.

killing
சதிஷ்,மணி ஆகிய இருவரும் சரண்

குற்றவாளிகளைப் பிடிக்க சேலம் சரக காவல் டிஐஜி பிரதீப் குமார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டுவந்த சதீஷ், மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தனர்.

இந்நிலையில் சதீஷின் கார் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்ததை அடுத்து சதீஷ், மணி ஆகியோர் சேலம் நீதிமன்றம் வந்து சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா இருவரையும் 30ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானி கேர் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நங்கவள்ளி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Intro:கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண் .Body:30-ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு .

ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை செய்ய நடந்த முயற்சியில் தேடப்பட்ட இருவர் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகையைச் சேர்ந்தவர் வேலுதங்கமணி (வயது33). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி உறுப்பினராக உள்ள இவர் நங்கவள்ளியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு வயதில் ஆன் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 8.30 மணியளவில், நங்கவள்ளியில் உள்ள வேலுதங்கமணியின் ஜவுளி கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென்று எடுத்து, வேலுதங்கமணியை சரமாரியாக வெட்டினர். தலை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு வேலு தங்கமணிக்கு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த 7 தங்கமணி சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் பஸ் ஒன்று சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வேலுதங்கமணி க்கு தற்போது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி காவல்துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விசாரணை செய்ததில் நங்கவள்ளியை சேர்ந்த சதீஷ் என்பதும், மேட்டூர் பகுதியைச் சார்ந்த மணி என்பதும் தெரியவந்தது. . இவர்களை பிடிக்க சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தனிப்படை அமைத்தார் .
இவர்கள் விசாரித்து சதீஷ் மற்றும் மணியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சதீஷின் கார் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது .

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் மருத்துவமனை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர் .

இந்த நிலையில் சதீஷ் மற்றும் மணி ஆகியோர் இன்று காலை சேலம் நீதிமன்றம் வந்து என் இரண்டு மாஜிஸ்திரேட் சிவா முன் சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்சிவா இருவரையும் 30ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் .

பின்னர் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சரண் அடைந்த இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானி கேர் நங்கவள்ளி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.