சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தால் அலுவலர்கள் மிரட்டப்படுவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்பிக்கு அழைப்பு கொடுக்க கூடாதா? அதையும் மீறி அலுவலர்கள் அழைப்பு கொடுத்தால், அந்த அலுவலர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கட்சி தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
ஆறு சட்டமன்ற தொகுதிக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் எதிர்க்கட்சி எம்பி என்று நினைக்கிறார். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்கள்.
என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமமாகும். நான் போராட்டக்காரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்படுத்த அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட் திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்றிரவு பாத்திபன் மற்றொரு ட்விட்டர் பதிவில், “சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன். நன்றி, சேலம் மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்.
-
சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன்.
— S.R.Parthiban (@SR_Parthiban) August 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
நன்றி,
சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்.
">சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன்.
— S.R.Parthiban (@SR_Parthiban) August 26, 2022
நன்றி,
சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்.சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன்.
— S.R.Parthiban (@SR_Parthiban) August 26, 2022
நன்றி,
சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக எங்களுக்கு பங்காளி உறவு முறை... முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு