தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 86 பேருக்கு , சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள காவலர்கள் விளையாட்டு திடலில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது .
டி.எஸ்.பி. ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், உடற்பயிற்சி, காவலர்களுக்கான ஆரம்பக்கட்ட பயிற்சிகள், பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறை, வாகன தணிக்கையின்போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் காவல் ஆய்வாளர்கள் வெங்கடாசலம், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, புதிய காவலர்களின் சமூக கடமைகளையும், பொறுப்புகளையும் எடுத்துரைத்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற இரண்டாம் நிலை பெண் காவலர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பணியில் நியமனம்!