சேலம்: "வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கூட்டணிக்கே தேர்தலில் ஆதரவு அளிப்போம்" என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சேலம் லீ பஜாரின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் வணிகர்களின் வாக்கு, ஒரு கோடிக்கும் மேல் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வணிகர் சங்கங்களின் உறுப்பினர்களின் வாக்குகளே வேட்பாளர் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும். அதனால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டணிக்கே நாங்கள் ஆதரவு அளிக்க இருக்கிறோம்" என்றார்.