சேலம்: பி.ஜி ரோடு, சந்தைப்பேட்டை, செவ்வாபேட்டை பகுதிகளில் கலப்படம் செய்யப்பட்ட சோம்பு, சீரகம் உள்ளிட்ட மசாலா பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அந்தப் பகுதிகளிள் திடீர் சோதனையை நடத்தினர்.
அதில் ஏகே கார்ப்பரேஷன் உரிமையாளர் கிரித்குமார் ராமன் லால் என்பவருடைய சீரகம், சோம்பு, கடுகு சேமிப்பு குடோனிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது கலப்படம் செய்து வைக்கப்பட்டிருந்த சீரகம் 8,250 கிலோ, சோம்பு 4,180 கிலோ மற்றும் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள், செயற்கை நிறமிகள், மாவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் அறிக்கை முடிவின்படி மேற்கண்ட உணவு வணிக நிறுவனர் மீது வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு மாத குழந்தைக்கு இன்சுலின் செலுத்திய தாய் - இரட்டை குழந்தைகள் கவலைக்கிடம்