ETV Bharat / state

காவிரி பிரச்னை சுமுகமாக தீர்க்க யோசனை சொல்லும் நல்லசாமி!

சேலம்: காவிரியில் தினசரி நீர்ப்பங்கீடு செய்யப்பட்டால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்னை சுமுகமாக தீர்க்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Nallasamy
author img

By

Published : Jun 12, 2019, 11:51 AM IST

சேலத்தில் நேற்று செய்தியாளர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழ்நாட்டிற்கான 419 டி.எம்.சி. தண்ணீரில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். ஆளும் கட்சியானது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காவிரியில் தினசரி நீர்ப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

நல்லசாமி பேட்டி
காவிரி இறுதித் தீர்ப்பு 2007இன் படி கர்நாடக மாநிலம் மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை கொடுக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் அதே அளவு தண்ணீரைக் கொடுப்பதில்லை. தினசரி நீர்ப்பங்கீடு இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
இதனை ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் இதுவரைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக காவிரி தினசரி நீர்வரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு தீர்ப்பில் விகிதாச்சாரப்படி தினந்தோறும் நீர்ப்பங்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். இது எளிதானதும் கூட. இதுவே இரு மாநில மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
அதே போல நதிகள் இணைப்புத் திட்டம் காலத்தின் கட்டாயம். அதையும் துல்லியமாகக் கணக்கிட்டு சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாத வண்ணம் காவிரி-கோதாவரி உள்ளிட்ட ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் காக்க சாத்தியமான திட்டங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Intro:காவிரியில் தினசரி நீர் பங்கீடு செய்யப்பட்டால் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே இருக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Body: சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறும்போது ," தமிழ் நாட்டிற்கான 419 டிஎம்சி தண்ணீரில் 192 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். ஆளும் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காவிரியில் தினசரி நீர்ப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.

காவிரி இறுதித் தீர்ப்பு 2007 இன் படி கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை கொடுக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் இதே அளவு தண்ணீரை கொடுப்பதில்லை.

தினசரி நீர் பங்கீடு இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் தினசரி நீ பங்கீட்டை ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் விவசாய சங்கங்கள் இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது .

காவிரி மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக காவிரி தினசரி நீர்வரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு தீர்ப்பில் விகிதாச்சாரப்படி தினந்தோறும் நீர்ப்பங்கீடு வழங்க ஆவன செய்ய வேண்டும்.

இது எளிதானதும் கூட . இதுவே இரு மாநில மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதே போல நதிகள் இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம். அதை துல்லியமாக கணக்கிட்டு சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படாத வண்ணம் காவிரி கோதாவரி உள்ளிட்ட ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளைத்ஷ துரிதப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:மேலும் நல்ல சாமி, " தமிழகத்தில் வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்.

விவசாயிகளின் நலன் காக்க சாத்தியமான திட்டங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.