ETV Bharat / state

ப.சிதம்பரத்தால் பூமிக்கு பாரம் - முதலமைச்சர் பழனிசாமி காட்டம் - mettur dam

சேலம்: மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து வைத்தாரா? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ப.சிதம்பரத்தால் பூமிக்கு பாரம் என்றும் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர்
author img

By

Published : Aug 13, 2019, 2:16 PM IST

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், 'மேட்டூர் அணை நிரம்பியதால், மேற்கு, கிழக்கு கால்வாய்கள் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது பகல் நேரம் என்பதால் அதிகளவில் தண்ணீர் திறக்கவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை கண்காணிக்க, ஐஏஎஸ் அலுவலர் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில், இனி நமக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், நீலகிரியில் அமைச்சர் உதயகுமார், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 கோடியில் நிவாரணம் உதவி வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் செய்ய முடியும் என்றார்.

தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக அறிவித்தாலும்கூட தமிழ்நாடு அரசு அதை வேடிக்கைபார்க்கும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். காவிரி பிரச்னையை தீர்த்து வைத்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்த்து வைத்தாரா? பாலாறு பிரச்னையை தீர்த்து வைத்தாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், ப.சிதம்பரம் இருப்பது பூமிக்கு பாரம்' என்று விமர்சித்தார்.

Intro:சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ள நிலையில் இன்று காலை தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசன தேவைகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டார்.

பின்னர் மேட்டூரில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார்.Body:அப்போது அவர் கூறுகையில், "

மேட்டூர் அணை நிரம்பியதால், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது- தற்போது பகல் நேரம் என்பதால் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆற்றில் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.
கடை மடை விவசாயிகள் பயனடையும் வகையில் அதிகளவு தண்ணீர் திறக்கப்படும். இதுபோல டெல்டா பாசன ஏரி, குளங்களும் நிரப்பப்படும்.
ஏரி, குளங்கள் தூர் வாரும் பணியை கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.தற்போது வாய்க்கால்களில் 26 ஆயிரம் கனஅடி தண்ணீர்தான் போக முடியும். இது நாற்று நடுவதற்கு போதுமானது. விவசாயிகளுக்கு தேவையான உரம், நெல் விதைகள் தயார் நிலையில் உள்ளது. கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பிவிட்டது. இனி வரும் நீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு வரும். எனவே, நமக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும்.

டெல்டா மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதி பெற்று, கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். 
மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லவில்லை என்று  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை கூறியிருக்கிறார். கனமழை பெய்த அடுத்த நாளே, அமைச்சர் உதயகுமார், நீலகிரி மாவட்டத்துக்கு சென்று,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில்  இருந்து ரூ.10 கோடியில் நிவாரணம் செய்வதாக கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் செய்ய முடியும்.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். காவிரி பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? பாலாறு பிரச்சினையை தீர்த்து வைத்தாரா ?தமிழகத்திற்கு வேறு திட்டம் கொண்டு வந்தாரா? அவர் இருப்பது பூமிக்கு பாரம்.

நான் வெளிநாட்டுப் பயணம் செல்ல உள்ளேன் அந்த பயணத்தின் போது கால்நடை ஆராய்ச்சி, எரிசக்தித்துறை, மருத்துவம் உள்பட பல்வேறு துறை வளர்ச்சியைப் பார்வையிட்டு, அவற்றை தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அங்குள்ள நம் நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து, தமிழகத்துக்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ள இருக்கிறோம் .
Conclusion:என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.