முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசம்மாள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் சேலத்தில் காலமானார் . இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால் முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சேலம் நகரம் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தலில் வெற்றி பெற அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக, இன்று காலை சிலுவம்பாளையத்தில், திமுக காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200 பேர் அதிமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, முதலமைச்சர் இன்று (அக். 18) மாலை கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க...கரோனாவை வைத்து ஊழல் செய்யும் அதிமுக அரசு - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்