ETV Bharat / state

'நதிநீர் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டுவருகிறது' - எடப்பாடி பழனிசாமி! - சேலம்

சேலம்: தமிழ்நாடு - கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்னைக்கென அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அனைத்து நதி நீர் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.

பழனிசாமி
author img

By

Published : Sep 28, 2019, 2:47 PM IST

சேலத்தில் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பொதுமக்களின் சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அதில், "பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் வகையில் குடிமராமத்துப் பணித்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மொத்தம் உள்ள 40 ஆயிரம் ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பியபோது, அடுத்து நீர்ப்பாசன முறைகளை அறிய இஸ்ரேல் செல்வதாகத் தெரிவித்தேன். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரியில் வீணாகும் உபரி நீரை சேமிக்காத முதலமைச்சர், இஸ்ரேல் சென்று நீர்ப்பாசன முறைகளைத் தெரிந்து என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த திமுக, காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகளை கட்டினார்கள். எங்களை விமர்சிக்க தகுதியோ, அருகதையோ திமுகவிற்கு இல்லை. மேட்டூரிலிருந்து கொள்ளிடம்வரை ஒரு தடுப்பணையைக் கூட திமுக கட்டவில்லை. எங்களைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மூன்று தலைமை பொறியாளர்கள், இரண்டு கண்காணிப்புப் பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, உபரி நீரை தேக்கிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். தற்போது கொள்ளிடம் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலத்தில் தடுப்பணை கட்டும் பணி 20 விழுக்காடு முடிந்திருக்கிறது. அந்தத் தடுப்பணை கட்டப்பட்டு கொண்டிருக்கிறது.

மேட்டூர் முதல் கொள்ளிடம்வரை எந்தெந்த இடத்தில் தடுப்பணை கட்டுவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. அடுத்து கரூர் புகளூர் அருகே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. அங்கு 1 டி.எம்.சி. நீரே தேக்கிவைக்கும் வகையில் விரைவில் தடுப்பணை கட்டப்படும்.

காவிரியின் குறுக்கே மூன்று முதல் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவே காவிரிநீரை வீணாக கடலில் கலக்கவிட்டது எந்த அரசு என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கேரளம் சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நதிநீர் திட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - கேரளா இடையேயான நதிநீர் திட்ட பிரச்னைகளுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களில் கிடைக்கும். அதற்கடுத்து அனைத்து நதி நீர் திட்டங்களும் செயல்படுத்தப்படும். திமுகவினர் பதவிகளை அனுபவித்தீர்கள். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களின் பிரச்னைகளை பற்றி சிந்தித்து, அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

Intro: தமிழகம்-கேரளம் இடையேயான நதி நீர் பங்கீடு பிரச்னைக்கென அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2 மாதங்களில் கிடைத்தவுடன், அனைத்து நதி நீர் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.Body:

சேலத்தில் வீரபாண்டி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் சிறப்பு குறை தீர் திட்ட முகாமில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார்.

அப்போது அவர் , " சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும், நிராகரிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும்.
மக்களுக்கு பயனில்லாத ஆட்சி என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சிகளும் குறை கூறி வருகிறது. அவர்களுக்கு நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டத்தின் மூலம் பதிலளித்து வருகிறேன்.
ஒரு அரசு மக்களின் குறைகளை நிறைவேற்றி தருவதே சிறந்த உதாரணமாகும்.
பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரிக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறையின் கீழ் 14,000 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களில் 26,000 ஏரிகளும் வருகின்றன. மொத்தம் 40,000 ஏரிகளையும் ஒரே நேரத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வார முடியாது. எனவே, படிப்படியாக நிதி ஒதுக்கி ஏரிகளை தூர்வாரி வருகிறோம்.
ஏற்கெனவே முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பிய போது, அடுத்து நீர் பாசன முறைகளை அறிய இஸ்ரேல் செல்வதாக தெரிவித்தேன்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரியில் வீணாகும் உபரி நீரை சேமிக்காத முதல்வர், இஸ்ரேல் சென்று நீர் பாசன முறைகளை தெரிந்து என்ன செய்ய போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகளை கட்டினீர்கள் எதையும் செய்யவில்லை. எங்களை விமர்சிக்க தகுதியோ,அருகதையோ திமுகவிற்கு இல்லை.
மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை ஒரு தடுப்பணையை கூட திமுக கட்டவில்லை. எங்களை பற்றி அவர்களுக்கு தகுதி இல்லை.
நீர் மேலாண்மை திட்டங்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். மூன்று தலைமை பொறியாளர்கள், இரண்டு கண்காணிப்பு பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, உபரி நீரை தேக்கி வைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
தற்போது கொள்ளிடம் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலத்தில் தடுப்பணை கட்டும் பணி 20 சதவீதம் முடிந்திருக்கிறது. அந்த தடுப்பணை கட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எந்தெந்த இடத்தில் தடுப்பணை கட்டுவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்து கரூர் புகளூர் அருகே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு 1 டி.எம்.சி. நீரே தேக்கி வைக்கும் வகையில் விரைவில் தடுப்பணை கட்டப்படும்.
காவிரியின் குறுக்கே மூன்று முதல் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே காவிரி நீரை வீணாக கடலில் கலக்கவிட்டது எந்த அரசு என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
அதேபோல ஓடைகளில் தடுப்பணை கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரூ.600 கோடி வரை நிதி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டத்திற்கு முன்னுரிமை தரும் அரசாக உள்ளோம்.
எதையும் பொறுத்து கொள்ள முடியாமலும், மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகி வருவதை தாங்கி கொள்ள முடியாலும் மு.க.ஸ்டாலின் ஏதோ ஏதோ பேசி வருகிறார்.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கேரளம் சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். நதி நீர் திட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக அதிக காலம் இருந்தவர் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன். காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு பிரச்னைக்கு எந்த தீர்வும் காணாதவர். நீங்கள் பேச என்ன தகுதி உள்ளது
உங்கள் ஆட்சியில் எத்தனை தடுப்பணைகளை கட்டினீர்கள் எதுவும் செய்யவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதற்கு ஆதரித்து குரல் கொடுத்தால், பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.
எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட கூடாது என்பதால், திட்டங்களை விமர்சித்து வருகிறீர்கள்.
தமிழகம்-கேரளம் இடையேயான நதி நீர் திட்ட பிரச்னைகளுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை 2 மாதங்களில் கிடைக்கும். அதற்கடுத்து அனைத்து நதி நீர் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
திமுகவினர் பதவிகளை அனுபவித்தீர்கள்.

Conclusion:
மக்களை பற்றி கவலைப்படவில்லை. மக்களின் பிரச்னைகளை பற்றி சிந்தித்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.