ETV Bharat / state

நாளை சேலம் வரும் முதலமைச்சருக்கு தீவட்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டம்! - salem district news in tamil

நாளை சேலம் வரவுள்ள முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவினர் தீவட்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்பை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

cm welcomed Deevattipatti
நாளை சேலம் வரும் முதலமைச்சருக்கு தீவட்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்புக்கு திட்டம்
author img

By

Published : Feb 9, 2021, 11:11 PM IST

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். பரப்புரை பயணத்தை முடித்துவிட்டு சேலம் வரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஓமலூரிலுள்ள கட்சி அலுவலகம் செல்லும் முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளார்.

ஆலோசனைக்குப் பிறகு சேலம் நெடுஞ்சாலைத்துறை நகர் வீட்டில் இரவு தங்கும் அவர், வியாழக்கிழமை திருப்பூர் மாவட்டம் புறப்பட்டுச் செல்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.