சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திருப்பூர் மாவட்டம் பெரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (26) என்பவர் கடந்த 21 ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று (பிப்.24) காலை உணவு வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்ற சரவணன், தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், உடனடியாக பள்ளப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரவணன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதையடுத்து, காவல் துறையினர் சரவணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அறையில் இருந்த அவரது உடமைகளை ஆய்வுசெய்த காவல் துறையினர் சரவணனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தனியார் தங்கும் விடுதியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வங்கியில் பணிபுரிந்த பெண் தற்கொலை: காதல் விவகாரமா?