சேலத்தில் காதலனைக் கரம் பிடிக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அருள்வாக்கு கூறிய மதுரா என்ற திருநங்கை பிரம்பால் அடித்து, பேய் ஓட்டிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருள்வாக்கு கூறும் மதுரா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டுவதால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த திருநங்கை மதுரா, ' காதலுக்கு நாங்கள் எதிரி இல்லை எனவும், பள்ளி மாணவியின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேய் ஓட்டும் போது பிரம்பால் அடித்ததாகவும், இந்த வயதில் காதல் தேவை இல்லை என்பதாலும், பொய் சொல்லக் கூடாது என்பதற்காகவும் தான் இளம்பெண்ணிடம் சத்தியம் வாங்கியதாகவும்' தெரிவித்தார்.
மேலும் ' பெற்றோர்களின் சம்மதத்துடன் பேயோட்டும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளதாகவும் சில ஊடகங்கள் தங்களைப் பற்றி தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதால் செவ்வாய்ப்பேட்டை பகுதி மக்கள் சிலரிடம் இருந்து மிரட்டல் வருவதாகவும்’ கூறினார்.
இதையும் படிங்க:
காதலுக்காக பேய் நாடகம் போட்ட இளம்பெண் - பிரம்பால் அடித்து எல்லைமீறிய திருநங்கை சாமியார்