ETV Bharat / state

சேலத்தில் விதிகளை கடைப்பிடிக்காத மூன்று கடைகளுக்கு சீல் - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

சேலம்: ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காத மூன்று மளிகைக் கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

three shops sealed in salem for violating curfew

author img

By

Published : May 2, 2020, 12:49 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

தகுந்த விலகலை கடைப்பிடிக்காமல் விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைத்தும் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கைவிடுத்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அலுவலர்கள்

அதனடிப்படையில் சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருள்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடாது எனவும் அனைவரும் கட்டாயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கில் செயல்பட்ட பூண்டு மண்டிக்கு சீல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.