ETV Bharat / state

சேலத்தில் மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

author img

By

Published : Sep 19, 2019, 8:05 AM IST

சேலம்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

child labour

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாதுபாய்குட்டை காந்தி பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தின் உதிரிபாக கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து, அந்தக் கடைகளில் ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை மீட்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் நிர்மலா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள், சைல்டு லைன் நிர்வாகிகள், காவல் துறையினர் தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள கடைகளில் நேற்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அதன்படி, ஆட்டோமொபைல் கடைகளில் தொழிலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த 13வயது சிறுவனை, குழந்தை தொழிலாளர் அலுவலக நிர்வாகிகள் மீட்டு அச்சிறுவனை காப்பகத்தில் சேர்த்தனர். அதேபோல சேலம் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு சிறுவர்களையும் குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்தக் கூடாது என்று சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Intro:

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகளில் பணியில் ஈடுபடுத்தப் பட்ட 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.Body:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தாதுபாய்குட்டை காந்தி பஜார் பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாக கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து, தகுந்த சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் நிர்மலா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள், சைல்டு லைன் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள கடைகளில் இன்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அந்தப் பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் கடைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 13 வயது நிரம்பிய சிறுவனை மீட்ட குழந்தை தொழிலாளர் அலுவலக நிர்வாகிகள் அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.

அதேபோல சேலம் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த இரண்டு சிறார்களையும் குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்டனர். மேலும் குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்த கூடாது என்று சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:மீட்கப்பட்ட சிறார்களை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

( No photos and videos)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.