ETV Bharat / state

கேரளாவின் ஓபிஎஸ் நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்! - அதிமுக பொதுச்செயலாளர்

Alternative party people joined ADMK: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், இஸ்லாமியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜன.6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த 400க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:54 PM IST

Updated : Jan 7, 2024, 4:41 PM IST

சேலம்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜன.6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தேனி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.பி ராமர் மற்றும் பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் ஏற்பாட்டில், திமுகவைச் சேர்ந்த தாமரைக்குளம் பேரூர் இளைஞரணி துணைச் செயலாளர் அப்பாஸ் மைதீன் தலைமையில், மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் செல்லராமன், முன்னாள் தென்கரை பேரூர் செயலாளர் கருத்தப்பாண்டி, பேரூர் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார், மகளிர் அணி செயலாளர் விஜயா, பெரியகுளம் நகர இளைஞரணி நிர்வாகி ரபிக் ராஜா,

பெரியகுளம் தெற்கு ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, பெரியகுளம் நகர வர்த்தக அணியைச் சேர்ந்த சம்சுதீன், பெரியகுளம் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் முகமது சபீக் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் என மொத்தம் 250 பேர், நேற்று (ஜன.6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது இஸ்லாமிய மக்களின் புனித நூலான திருக்குர் ஆன் புத்தகத்தை இஸ்லாமிய மக்களுக்கு பரிசாக வழங்கினர். அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய மக்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், கேரள மாநிலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட கேரள மாநில பொருளாளர் ஜெயலால் தலைமையில், கேரள மாநில அவைத் தலைவர் ஜிஜ்ஜோ வெம்பிலான், மாநில இணைச் செயலாளர் மல்லிகா,

மாநில துணைச் செயலாளர்கள் யசோதா மற்றும் ஹரீஸ், திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ராதிகா, மாவட்டத் தலைவர் பிரமோத், மாவட்ட இணைச் செயலாளர் சந்திரிகா, கொல்லம் மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பிள்ளை, மாவட்டத் தலைவர் லத்திகாகுமாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில், அமமுகவைச் சேர்ந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் தக்காளி சந்திரன், மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் செல்வம், ஆண்டிபட்டி பேரூர் இணைச் செயலாளர் பாக்கியராஜ், மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சிவராஜா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் என மொத்தம் 100-க்கும் மேற்பட்டோர்களும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தேனி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் முருகன், மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, துணைச் செயலாளர்கள் சோலைராஜ், உஷாராணி, மாவட்டப் பொருளாளர் வைகை பாண்டி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சதகத்துல்லா, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் பெரியவீரன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அனுமந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "காவல்துறையை வம்புக்கு இழுக்கிறேன்" - சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்..!

Last Updated : Jan 7, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.