சேலம் மாவட்டம் பிரசித்திப் பெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் திருவிழா ரத்துசெய்யப்பட்டது.
இதனால் கோயில் உண்டியல் திறக்கப்படவில்லை. இன்று (நவ. 07) காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிப் பதிவை ஆய்வுசெய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
தற்போது சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல் துறையினர் அந்த நபரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். உண்டியலில் பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உண்டியல் உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை