சேலம் வாழப்பாடி அருகேவுள்ள சசி ஜுவல்லரி நகைக்கடைக்கு இன்று (ஜூன் 06) காலை மாஸ்க் அணிந்து முதலில் ஒரு பெண் கடையினுள் வந்து மோதிரம் வேண்டும் என கேட்டு மாடல் பார்த்துள்ளார். 5 நிமிடம் கழித்து பின்பு மாஸ்க் அணிந்தவாறு வந்த இரண்டு பெண்கள் ஒரு சவரன் சங்கிலி இதே மாடலில் வேண்டும் என ஒரு மாடலை நகை கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.
அந்த மாடல் இல்லை என உரிமையாளர் சொல்லியதால் மூன்று சவரன் சங்கிலி வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது மோதிரம் வாங்க வந்த பெண் எனக்கு அவசரம் என்று கூறி கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி கடையில் உள்ள தங்க நகைகள் குறித்து விவரங்கள் கேட்டு கவனத்தை திசை திருப்பியுள்ளார்.
அந்த நேரத்தில் சிகப்பு நிற உடை அணிந்த பெண் நகையை கையில் லாவகமாக சுருட்டி தனது சேலைக்குள் மறைத்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. பின்பு முதலில் மோதிரம் வாங்க வந்த பெண் கிளம்பி, பிறகு வருகிறோம் என்று கூறி நகைக் கடையில் இருந்து கூறிவிட்டு அனைவரும் கிளம்பினர்.
அவர்கள் கிளம்பிய பிறகுதான் தங்க செயின் காணாமல் போனதை கடை உரிமையாளர்கள் கண்டு பிடித்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது நகை திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தார். உடனடியாக இது குறித்து அவர் வாழப்பாடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே ‘இந்த திருட்டு பெண்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என’ கடை உரிமையாளரின் விளம்பரம் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது வழக்கு