ETV Bharat / state

குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய டிரைவர் - வெளியான சிசிடிவி வீடியோ

author img

By

Published : Sep 15, 2020, 1:56 PM IST

சேலம்: குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவரை காவல்துறையினரக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

car driver
car driver

சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன், கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (செப்.13) சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவரை இறக்கிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது மணி கண்டன் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மணிகண்டன் ஓட்டி வந்த கார் சேலம் நான்கு ரோட்டை கடந்த நிலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. கட்டுப்பாட்டை மீறி தறிகெட்டு ஓடியதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும்ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

தாறுமாறாக காரை இயக்கிய ஓட்டுநர்

இதனையறிந்த அப்பகுதி மக்கள் கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டனை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், கார் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்தக் காணொலி காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'டைம் என்ன பாஸ்' கவிதாலயாவின் முதல் வெப்சீரிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.