ETV Bharat / state

சேலத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - சேலத்தில் குடிமராத்து பணி ஆய்வு

சேலம்: பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகள், மேட்டூர் அணை வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
குடிமராமத்து பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
author img

By

Published : Jun 3, 2020, 2:53 AM IST

பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகள், மேட்டூர் அணை வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் நீர்நிலைகளை பராமரிக்கவும், மழைக்காலங்களில் நீர் வீணாகாமல் சேமித்து வைப்பதற்கும், ஏரி குளங்கள் தூர்வாரி மேம்படுத்தும் பணிகளையும், கடைக்கோடி நிலங்களுக்கும் பாசன வசதி எளிதில் கிடைத்திடும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரி மேம்படுத்தும் பணிகளையும், மேற்கொள்ள வேண்டுமென ஆணையிட்டு, நீர் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திடும் வகையில் குடிமராமத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்கள்.

இத்திட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து பாசனதாரர்கள் சங்கங்களை உருவாக்கி அவர்களின் பங்களிப்புடன் அவ்விவசாயிகளே நேரடியாக இக்குடிமராமத்து திட்டத்தினை நிறைவேற்றிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளும் காட்சி
ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளும் காட்சி

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் இக்குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 48 குடிமராமத்து பணிகளும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.9.79 கோடி மதிப்பீட்டில் 31 குடிமராமத்து பணிகளும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 20 குடிமராமத்து பணிகளும் என மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18.62 கோடி மதிப்பீட்டில் 99 குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மழைக்காலங்களில் கிடைக்கின்ற நீர் வீணாகாமல் சேமித்து வைத்து குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும், விவசாய பணிகளுக்கும் இந்நீர் பெரிதும் பயன்பெற்று வருகின்றது. இத்திட்டம் அரசு 90 சதவீத நிதியுதவியும், அந்தந்த பாசனதாரர்கள் சங்கங்களின் சார்பில் 10 சதவீத நிதி பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இக்குடிமராமத்து திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட்டு விவசாயிகளே ஒன்றிணைந்து இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த (2020-21) ஆண்டில் சேலம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்டம் சார்பில் ரூ.6.77 கோடி மதிப்பீட்டில் 1,848.73 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 21 குடிமராமத்து திட்டப் பணிகளுக்கும், பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் 953.86 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 7 குடிமராமத்து திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் 2,802.59 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 28 குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.

ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளும் காட்சி
ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளும் காட்சி

அதுபோல தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின் படி சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான குடிமராமத்து திட்டப் பணிகள், பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்டம் மற்றும் மேட்டூர் அணைக் கோட்டம் ஆகியவற்றின் சார்பில் விவசாயிகளின் பங்களிப்போடு, இக்குடிமராமத்து பணிகளை விவசாயிகளே மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.19.89 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் கிழக்குக்கரை கால்வாயில் 13.90 கி.மீ நீளத்திற்கு புனரமைக்கும் பணி மற்றும் கான்கிரீட் தாங்கு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. " என்றார்.
முன்னதாக, மேட்டூர் அணையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மதகுகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்து வருடாந்திர பராமரிப்பு பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பொதுப் பணித்துறையின் மேட்டூர் அணைக் கோட்ட செயற் பொறியாளர் , மேட்டூர்சார் ஆட்சியர், உதவி ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மேட்டூர் வட்டாட்சியர், வட்டாட்சியர், மேட்டூர் அணைக் கோட்ட உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், மேட்டூர் விவசாயிகள் சங்க தலைவர் உட்பட பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: புற்றுநோயாளிகளின் சவால்கள்: மருத்துவ நிபுணர் சுப்பையா சண்முகம் நேர்காணல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.