ETV Bharat / state

சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

author img

By

Published : Feb 10, 2020, 7:53 AM IST

சேலம்: சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆரய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிகல் நாட்டி தொடங்கிவைத்தார்.

the-chief-minister-laid-the-foundation-stone-for-the-international-animal-husbandry
the-chief-minister-laid-the-foundation-stone-for-the-international-animal-husbandry

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றினர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு ரூ. 564.44 கோடியும், ஆராய்ச்சி நிலையத்தை ஒட்டி உருவாக்கப்பட உள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ. 196.36 கோடியும், இந்நிலையங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்துக்கு ரூ.262.16 கோடி என மொத்தம் 1,022.96 கோடி ஒதுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைய உள்ள கால்நடைப் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இங்கு உருவாக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும்,பாரம்பரிய மாட்டினங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஆராய்ச்சியும் இங்கு மேற்கொள்ள உள்ளதாகவும், காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய தமிழ்நாட்டின் மாடுகள், சிவப்பு சிந்தி, சாகிவால் ஆகிய வெளிமாநில மாட்டினங்கள் என மொத்தம் 200 கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு பல்வேறுவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் பண்ணை பிரிவில் 800 இன செம்மறி ஆடுகள், 300 சேலம் கருப்பு ஆடுகளை கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்ணை அமைக்கபடவுள்ளது. மேலும் வெண் பன்றி பண்ணையில் ஏழு ஆண், 60 பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக வளர்க்ப்பட்டு, ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் வெண்பன்றி குட்டிகள் விற்பனை செய்யப்படும் எனவும், அதில் அதிநவீன தானியங்கி தீவனம், குடிநீர் அளிப்பான்கள் கொண்டு மாதிரி வெண்பன்றி பிரிவு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு கோழி இனங்கள் தானியங்கி தீவனம், குடிநீர், முட்டை தரம் பிரிப்பான்கள் உள்ளடங்கிய, 50 ஆயிரம் அசல் நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை உருவாக்கப்படும் கூடுதலாக கோழிக்குஞ்சு பொரிக்க வசதியும், கோழித் தீவன ஆலையும் அமைக்கப்படும். இப்பிரிவில் இருந்து பெறப்படும் முட்டைகளும், குஞ்சுகளும் அரசு கால்நடை நலத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச தரத்தில் உருவாகும் கால்நடை ஆரய்ச்சி பூங்கா
தமிழ்நாட்டின் நாட்டின நாய் இனங்கள் தாயகமாகக் கொண்ட ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கண்ணி இன நாய்கள் என மொத்தம் 40 எண்ணிக்கையில் வளர்க்கப்படும் நாய்குட்டிகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். மீன்வளர்ப்பு செயல்முறை விளக்கப் பிரிவில் ஆண்டுதோறும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி பண்ணையும் நவீன மீன் விற்பனை மற்றும் மீன் பொருட்கள் உற்பத்தி பிரிவு மீன் வளர்ப்புடன் ஒருங்கிணைந்த காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Intro:காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிBody:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெருவிழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல்லை நாட்டி விழாவில் உரையாற்றினர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், " நெடுவாசல் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு ஒரு போதும் அனுமதி வழங்காது சட்டமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம்.

மாநில அரசு தடையில்லா சான்று வழங்காமல் மத்திய அரசு எந்ததிட்டதை துவங்க முடியாது . இந்த முடிவு குறித்து நன்றாக தெரிந்து இருந்தும் வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் பேசி வருகின்றார்.

காவிரி டெல்டா மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள் அதனை ஏற்று தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் அரியலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் அறிவிக்கப்படும். அதற்காக சட்ட வல்லுனர்களை கொண்டு ஆலோசித்து தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்." என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்," கால் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு ரூ. 564.44 கோடியும், ஆராய்ச்சி நிலையத்தை ஒட்டி உருவாக்கப்பட உள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ. 196.36 கோடியும் இந்த நிலையங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்துக்கு ரூ.262.16 கோடி என மொத்தம் 1,022.96 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
 
ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைய உள்ள கால்நடைப் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இங்கு உருவாக்கப்பட உள்ளது.

கறவை மாடுகள், ஆடுகள், வெண்பன்றி,நாட்டின் நாய்கள் பராமரிப்பில் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல்,கால்நடை மருத்துவம் குறித்து முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டறிவு வழங்குதல்,கால்நடை உற்பத்திப் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துதல்,கால்நடை மீன்வளம் கோழி வளர்ப்பில் ஈடுபட தொழில் முனைவோருக்கான ஒருங்கிணைந்த தகவல் மையம்,தொழில் துறையினருக்கு தேவையான திறன்மிகு மனிதவளத்தை உருவாக்கிட சான்றிதழ் பயிற்சிகள் மற்றும் பட்டயப் படிப்புத் திட்டங்கள் வழங்குதல்,உள்நாட்டு கறவை மாட்டு இனங்கள் ஆட்டு இனங்கள் மற்றும் கோழி இனங்களை பாதுகாத்தல் மற்றும் உற்பத்தித் திறனை பெருக்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கால்நடைப் பூங்காவில் அமைய உள்ளன.

மேலும்,பாரம்பரிய மாட்டினங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது. காங்கேயம் உம்பளாச்சேரி ஆலம்பாடி புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகிய தமிழகத்தின் நாட்டின மாடுகள் மற்றும் சிவப்பு சிந்தி சாகிவால் மற்றும் ஆகிய இந்திய மாட்டினங்கள் என மொத்தம் 200  கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு பல்வேறுவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 
 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் பண்ணை பிரிவில் 800 மீட்டர் இன செம்மறி ஆடுகள் மற்றும் 300 சேலம் கருப்பு ஆடுகளை கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
 
 வெண் பன்றி பண்ணையில் ஏழு ஆண் மற்றும் 60 பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக வளர்த்தப்பட்டு ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் வெண்பன்றி குட்டிகள் விற்பனை செய்யப்படும் அதில் அதிநவீன தானியங்கி தீவனம் மற்றும் குடிநீர் அளிப்பான்கள் கொண்டு மாதிரி வெண்பன்றி பிரிவு அமைக்கப்படும்.
 
 உள்நாட்டு கோழி இனங்கள் தானியங்கி தீவனம் குடிநீர் மற்றும் முட்டை தரம் பிரிப்பார்கள் உள்ளடக்கி 50 ஆயிரம் அசீல் நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை உருவாக்கப்படும் .கூடுதலாக கோழி குஞ்சு பொரிக்க வசதியும் கோழி தீவன ஆலையும் அமைக்கப்படும். இப்பிரிவில் இருந்து பெறப்படும் முட்டைகளும் குஞ்சுகளும் அரசு கால்நடை  நலத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் தரமான கோழி தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.
 
 நாட்டின நாய் இனங்கள் தமிழகத்தில் தாயகமாகக் கொண்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கோம்பை கண்ணி இன நாய்கள் என மொத்தம் 40 எண்ணிக்கையில் வளர்க்கப்படும் இப்பிரிவில் இருந்து பெறப்படும். நாய்குட்டிகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக விற்பனை செய்யப்படும்.
 
 நவீன உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு பிரிவு அமைக்கப்படும் .இப்பிரிவில் 50 கலப்பின கறவை மாடுகள் வளர்க்கப்படும். ஆண்டுதோறும் 25 லிட்டர் பால் பதப்படுத்தப்படும் வகையில் பால் குளிரூட்டும் நிலையம் பால் பொருட்கள் விற்பனை வசதியுடன் ஏற்படுத்தப்படும் மாட்டு தீவனம் மற்றும் தாது உப்பு கலவை உற்பத்தி ஆலைகளும் அதிநவீன பால் மற்றும் பால் பொருட்கள் உணவகம் அமைக்கப்படும் தரமான தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.
 
 மீன்வளர்ப்பு செயல்முறை விளக்கப் பிரிவில் ஆண்டுதோறும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி பண்ணையும் நவீன மீன் விற்பனை மற்றும் மீன் பொருட்கள் உற்பத்தி பிரிவு மீன் வளர்ப்புடன் ஒருங்கிணைந்த காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்." என்று தெரிவித்தார்.
 
visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.