ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிமுன் அன்சாரி - காரணம் என்ன? - Latest news in tamil

Thamimun Ansari meet Edappadi Palaniswami: சேலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிமுன் அன்சாரி - காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 1:27 PM IST

Updated : Oct 3, 2023, 6:28 PM IST

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிமுன் அன்சாரி - காரணம் என்ன?

சேலம்: சேலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை சாதி மத வழக்கு பேதம் இன்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை முன்னெடுத்து வருகிறோம்.

36 முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைவரின் விடுதலை சாத்தியப்படுத்தித் தரக் கோரியும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுடைய விடுதலையை உறுதிபடுத்துங்கள் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தோம். ஆனால், தமிழ்நாடு அரசு அது குறித்து சேவி சாய்க்கவில்லை.

அதற்கான ஆதிநாராயணன் குழு குறித்தும் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இது குறித்து நாங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளை முற்றுகையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

161வது விதிகளின் படி இவர்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் ஆளுநர் முடிவு எடுக்க மாட்டார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற உதவியாக இருக்கும். 161வது விதியினை அமைச்சரவையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இந்த சிக்கல் முடியும் வரை பேரறிவாளனுக்கு வழங்கியது போன்ற நீண்ட விடுப்பு வழங்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள அனைத்து கட்சிகளையும் சந்தித்து வருகிறோம்.

இதையும் படிங்க: கோவையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.. நடந்தது என்ன?

நேற்று முன் தினம் திமுக அமைச்சர் ரகுபதியை சந்தித்தோம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரியைச் சந்தித்தோம். விடுதலைக்கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தோம். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனைச் சந்தித்தோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனைச் சந்தித்தோம். அதன் தொடர்ச்சியாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அதிமுக மதுரை மாநாட்டில் சிறைவாசிகள் தொடர்பான தீர்மானம் போடப்பட்டதற்கு எங்கள் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மீரான் போன்றவர்கள் வெளிவர உதவியாக இருந்தார்கள். இது அரசியல் சந்திப்பு என்பதை விட வாழ்வுரிமை சம்மந்தமானது.

பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி. துணிச்சலான இந்த முடிவை எடுத்ததற்காகத் தமிழ்நாடு மக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அதிமுகவும் பேசவில்லை, நாங்களும் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் மத்திய அமைச்சரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.. நடந்தது என்ன?

Last Updated : Oct 3, 2023, 6:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.