ETV Bharat / state

சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கிய த.வா.க தொண்டர்கள்! - salem TVK party attack tollgates

சேலம்: தலைவாசல், தொப்பூர் சுங்கச் சாவடிகள் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tvk
சேலம்
author img

By

Published : Mar 2, 2021, 1:34 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ‘தமிழர் வேலை தமிழருக்கே’ என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் நேற்றிரவு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மாநாடு நேற்று (பிப்.1) மாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 9.45 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து மாநாட்டிற்கு வந்தவர்கள், தாங்கள் வந்த வாகனங்களில் மீண்டும் ஊருக்கு திரும்பினர். மாநாட்டிற்கு வந்த வாகனங்களுக்கு, தலைவாசல், தொப்பூர், மேட்டுப்பட்டி ஆகிய மூன்று சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்காமலே அனுப்பப்பட்டன.

இந்நிலையில், சேலத்திலிருந்து தலைவாசல் வழியே கடலூருக்கு சென்ற தொண்டர்களின் வாகனங்கள் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கிய த.வா.க தொண்டர்கள்

இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல தொப்பூர், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் த.வா.க. தொண்டர்கள் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்களது கட்சியினர் இல்லை. அங்கு வந்தவர்கள் எங்கள் கட்சியினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சம்பவம் தொடர்பாக நானும் விசாரணை நடத்தி வருகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.