சேலம் மாவட்டம் ஐந்து ரோடு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "பாபர் மசூதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து வருகின்ற டிசம்பர் ஆறாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. மக்களுக்கான இந்தத் தேர்தலை நடத்த அரசுக்கு ஆர்வமில்லை. ரஜினி கமல் ஆகியோர் இணைந்து சினிமாவில் வேண்டுமென்றால் அற்புதங்களையும், அதிசயத்தையும் நிகழ்த்த முடியுமே தவிர அரசியலில் எந்த ஒரு அற்புதத்தையும் அதிசயத்தையும் அவர்களால் நிகழ்த்த முடியாது. அவர்களை மக்கள் ஓரங்கட்டி விடுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் 20,490 புகார் மனுக்கள் வந்துள்ளன! காவல் ஆணையர் தகவல்