தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளிப் பண்டிகையை அவரது சொந்த ஊரில் கொண்டாட முடிவு செய்துள்ளார். அதற்காக அவர், நேற்று மாலை சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து சாலை வழியாக சேலம் வந்தடைந்தார்.
அப்போது, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்துகொண்டார். அதன்படி சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் இல்லத் திருமணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படிங்க: 188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவர் கைது!