ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் நால்வர் பலி - குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் - students death case

கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.

ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் பிணங்களாக மீட்பு!..

author img

By

Published : Apr 13, 2023, 8:48 PM IST

சேலம்: எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக, எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும், பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அனைவரும் ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர்.

திடீரென அதில் குளித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்‌. அவர்களைக் காப்பாற்ற பிற மாணவர்கள் முயன்ற நிலையில், அவர்களைக் காப்பாற்ற முடியாதுபோகவே, மற்ற மாணவர்கள் பதறி வெளியில் சென்று அக்கம் பக்கத்தினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த எடப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி மாயமான கல்லூரி மாணவர்களை ஆற்றில் தேடிவந்தனர். இதில், காவிரி ஆற்றில் மூழ்கிய எடப்பாடி அரசு கலை கல்லூரி மாணவர்களான, இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கன்னந்தேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், எட்டிகுட்டை மேடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் இறுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக, தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நான்கு மாணவர்களின் உயிரிழப்பிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி வளர வேண்டியவர் என சொன்ன வானதி; அமித் ஷா பெயரை அவைக்குறிப்பில் நீக்கக்கோரிய நயினார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.