இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அவரிடம் நேரில் அளித்தனர்.
அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்ற இம்முகாமில் 349 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன மடக்கு குச்சிகள், தாங்கிகள், சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
முகாமில் கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து உதவிகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.