நெருப்பு வளைய சூரிய கிரகணம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்த அரிய நிகழ்வானது இன்று பல நாடுகளில் தெரிந்ததையடுத்து, சேலத்தில் இந்நிகழ்வினை காண மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தொலைநோக்கி பிரதிபளிப்பு மூலம் பொதுமக்கள் பார்க்க புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை பேருந்து பயணிகள், மாணவ/ மாணவியர் எனப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும் 9 மணிக்கு தோன்றிய பிறை வடிவ சூரியனை தொலைநோக்கி மூலம் கண்டுகழித்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் நடைகள் சாத்தப்பட்டிருந்த நிலையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் மட்டும் நடைகள் திறக்கப்பட்டு, பொது மக்கள் சிறப்பு பூஜைகள் செய்ய வழிவகைகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: 'போலி ஆன்மிகவாதிகளை நம்பக்கூடாது' - மதுரை ஆதீனம்!