ETV Bharat / state

பணமோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபரின் மகன் கைது - நிதி நிறுவன அதிபர்

அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சேலம் நிதி நிறுவன அதிபரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 10, 2023, 8:07 PM IST

சேலம்: ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதனை நம்பி சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொடக்கத்தில் அவர் கூறியபடியே அதிக வட்டியுடன் கூடிய கவர்ச்சி திட்டத் தொகையினை உறுப்பினர்களுக்கு கொடுத்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினராக இணைந்து முதலீடு செய்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி தனது உறுப்பினர்கள் யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் அவர் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பாலசுப்பிரமணியிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்த பலர் சேலம் வந்து பாலசுப்பிரமணியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்க சென்றபோது அடியாட்களை வைத்து மிரட்டி முதலீடு செய்தவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் இவர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் பண மோசடி புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், பாலசுப்ரமணி, அவரது மகன் வினோத் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கனவே காவல் துறையினர் பாலசுப்பிரமணியினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அவரது மகனை கைது செய்தவதற்காக காவல் துறையினர் முற்பட்டனர். ஆனால், அவர் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் காவல் துறையினர் தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (மே 10) வினோத்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்பு, அவரை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: எனது தற்கொலைக்கு அமைச்சர் சேகர்பாபு தான் காரணம்.. மகள் பரபரப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.