ETV Bharat / state

நிலத்தகராறில் விபரீதம்; மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 4:56 PM IST

Land Dispute Issue: ராசிபுரம் அருகே நிலத்தகராறு காரணமாக, மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மருமகனால் மார்பில் பலத்த காயத்துடன் மாமனார் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

son-in-law shot father-in-law in land dispute
நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்

சேலம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நிலத்தகராறு காரணமாக, மாமனார் மீது நாட்டுத் துப்பாக்கியால் மருமகன் சுட்டதில், மார்பில் பலத்த காயத்துடன் மாமனார் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே, கெடமலையைச் சேர்ந்தவர், விவசாயி வெள்ளையன் (60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர், இவரின் அண்ணன் மகளான குப்பாயி என்பவரை வளர்த்து, சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சௌந்தரராஜன், புதுப்பட்டியில் மணி என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். வெள்ளையன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரத்தை அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமான நிலத்தை செளந்தரராஜன் மீட்டு, பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, எனது காட்டு பத்திரத்தை நீ எதற்கு வாங்கினாய் எனக் கூறி வெள்ளையனுக்கும், சௌந்தரராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.04) ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அடிவாரப் பகுதியில் உள்ள தனது அரளித் தோட்டத்தில், வெள்ளையன் வேலை செய்து கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி முடிந்து வேனில் சென்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; வண்டியில் இருந்து குதித்த 6 மாணவிகள்!

இதில் ஆத்திரம் அடைந்த செளந்தர்ராஜன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவு ஆகியுள்ளார். இதில் வெள்ளையனின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார், வெள்ளையனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது சேலம் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த சௌந்தரராஜனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தகராறு காரணமாக மாமனார் மீது நாட்டுத் துப்பாக்கியால் மருமகன் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வியாபாரியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.