ETV Bharat / state

மாடு முட்டிய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - jallikattu death news in salam

சேலம்: நாகியம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்:நாகியம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Feb 23, 2020, 3:25 PM IST

சேலம் மாவட்டத்தை அடுத்து உள்ள நாகியம்பட்டி எனும் கிராமத்தில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, அதே கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் போட்டியில், தன் பெயரை பதிவு செய்யாமல், தனது சகோதரனின் பதிவு எண்ணைக் கொண்ட டி - சர்ட்டை அணிந்து கொண்டு, மாடு பிடி வீரராக களம் கண்டார்.

அப்போது களத்தில் இருந்த பிரபாகரன் மாடு பிடிக்கும் போது, துள்ளி வந்த காளை அவரது வயிற்றில் முட்டியது. இதில் காயமடைந்த பிரபாகரன் மேல் சிகிச்கைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் தனது பெயரைப் பதிவு செய்யாமல், மாடு பிடி வீரராக களம் கண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:துள்ளிக் குதித்த காளை, கிணற்றில் விழுந்து பலி': சோகத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.