ETV Bharat / state

'6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்க' - Six year old girl Sexual abuse by Mysterious people

சேலம்: ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

sexual
author img

By

Published : Nov 16, 2019, 3:54 PM IST

ஓமலூர் அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய ஆறு வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் மிட்டாய் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் சேலம் மாவட்ட சிபிஎம் குழு காவல் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சிபிஎம் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல்

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்பு சிறுமி மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல் துறை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், குறிப்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிக்க: பிஆர்பி நிறுவனம் மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

Intro:சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
Body:
சேலம் மாவட்டம்
  ஓமலூர் அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய 6 வயது சிறுமியை மர்ம நபர்கள், மிட்டாய் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சிறுமி மற்றும் சிறுமியின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் சிபிஎம் சேலம் மாவட்ட குழு காவல்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

  Conclusion:இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன் ஐ.ஞானசவுந்தரி மாவட்ட குழு உறுப்பினர் கே. ராஜாத்தி, டி.பரமேஷ்வரி, சிபிஎம் சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ் ஓமலூர் தாலுகா செயலாளர் பி. அரியாக் கவுண்டர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்பு சிறுமியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் குறிப்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.