ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை; பெரியார் பல்கலைகழக பதிவாளர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை; பெரியார் பல்கலைகழக பதிவாளர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை; பெரியார் பல்கலைகழக பதிவாளர் கைது
author img

By

Published : Jul 25, 2022, 7:05 PM IST

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகப் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் டி.கோபி (45). இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராகப் பதவி வகித்து வந்தவர். வேதியியல் துறை பேராசிரியரான இவரது துறையில் சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். பேராசிரியர் டி.கோபி, மாணவியின் நெறியாளராக உள்ளார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேராசிரியர் டி.கோபி மாணவியை தான் தங்கி இருக்கும் விடுதிக்கு ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பான விளக்கம் அளிப்பதாக வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் டி.கோபி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார்.

அப்போது உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்தனர். மாணவி மட்டும் விடுதிக்கு சென்று பதிவாளர் டி.கோபியை சந்தித்தார். அங்கே பதிவாளர் கோபி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த மாணவி, விடுதி அருகே காத்திருந்த தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பதிவாளர் கோபியைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கோபி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார்.

அதேபோல அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பதிவாளர் டி.கோபி, கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனிடையே ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாளர் டி.கோபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஒருபக்கம் இஸ்லாமிய முறைப்படி துவா, மறுபக்கம் வேதமந்திரங்கள் முழங்க சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.