ETV Bharat / state

மாயமாகிய சீமான் சடலமாக மீட்பு!

சேலம்: கிரானைட் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது மாயமான காவலாளி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரானைட் நிறுவன
author img

By

Published : Jul 20, 2019, 10:11 PM IST

சேலம் அருகே கொண்டலாம்பட்டி பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமான் சுந்தர்ராஜன் (55). இவர் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கிரானைட் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற சீமான், வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கிரானைட் நிறுவனத்தில் சென்று விசாரிக்கையில், அவர் வேலைக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரைத் தேடிய உறவினர்கள், எங்கும் கிடைக்காததால் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

மாயமாகிய கிரானைட் நிறுவன காவலாளி சடலமாக மீட்பு

தொடர்ந்து சீமான் சுந்தரராஜனை உறவினர்கள் தேடியபோது, அவரது சைக்கிள் பாலம் ஒன்றின் மேல் நின்றுகொண்டிடுந்தது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் பாலத்திற்கு அடியில் தேடியதில் சீமான் சுந்தரராஜன் கொலை செய்யப்பட்டு பாலத்திற்கு கீழ் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சீமான் சுந்தரராஜன் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கிரானைட் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அவர் கொலை செய்யப்பட்டு பாலத்துக்கு அடியில் உடல் வீச்சு.

Body:சேலத்தில் கிரானைட் கம்பெனியில் வேலைக்கு வந்த காவலாளி மாயமாகி இருந்தார் இவர் கொலை செய்யப்பட்டு சடலம் பாலத்துக்கு அடியில் வீசப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அருகே உள்ளது கொண்டலாம்பட்டி. இங்கு உள்ள பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமான் சுந்தரராஜன். 55 வயதான சீமான் சுந்தரராஜன் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சேலம் டு கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் கிரானைட் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு வந்த சீமான் சுந்தர்ராஜன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கிரானைட் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தனர்.

அப்பொழுது சீமான் சுந்தர்ராஜன் வேலைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து சீமான் சுந்தரராஜன் உறவினர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமான் சுந்தரராஜனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சீமான் சுந்தரராஜனின் சைக்கிள் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பாலம் ஒன்றின் மேல் பகுதியில் நின்று இருந்தது. இதனைப் பார்த்த சீமான் சுந்தரராஜன் உறவினர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். பிறகு செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து பாலத்துக்கு அடியில் உள்ள குட்டை போன்ற பகுதியில் சடலத்தை தேடினர். ஆனால் சடலம் கிடைக்கவில்லை.

பின்னர் பொக்லைன் இந்திரன் வரவழைக்கப்பட்டு சடலம் தேடப்பட்டது. அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் பொக்லைன் இயந்திரம் சரிந்து விழுந்துவிட்டது. பின்னர் வேறு ஒரு பெரிய பொக்லைன் இயந்திரம் வரவழைத்து குட்டையில் விழுந்த பொக்லைன் இயந்திரம் தூக்கி நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் பாலத்துக்கு அடியில் சீமான் சுந்தரராஜனின் உறவினர்கள் சிலர் இறங்கி தேடினர். பொழுது சடலம் சிக்கியது. பிறகு அவரது சடலம் மேலே தூக்கி போடப்பட்டது.

பின்னர் சீமான் சுந்தரராஜன் சடலத்தை கொண்டலாம்பட்டி காவல் தலைவர் மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சீமான் சுந்தர்ராஜன் மற்றும் சிலர் சேலம் டு கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பட்டர்பிளை பாலம் பகுதியில் இருக்கும் பகுதியில் அமர்ந்து சீட்டாடி வந்தனர். அன்று சீமான் சுந்தரராஜன் சம்பளம் வாங்கி ரூபாய் 3000 வைத்திருந்தார்.

இந்தப் பணத்தை பறிக்க யாரும் அவரைக் கொன்று சடலத்தை பாலத்துக்கு அடியில் வீசினார்களா? அல்லது சீட்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் சீமான் சுந்தரராஜன் கொல்லப்பட்டாரா? என்று தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.