சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் S.R. பார்த்திபனின் புதிய அலுவலகம் இன்று சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள SRP டவர்ஸ் மேல் மாடியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் வீரபாண்டி அ. ராஜா, பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விருந்தினர்கள் அனைவரும் அலுவலக கட்டட திறப்பை வாழ்த்தி பேசினர்.
இதனையடுத்து இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும் பரிசாக வழங்கப்பட்டது.