ETV Bharat / state

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது - பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

சேலத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் காரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்படம் இருந்ததை அகற்றி, காரை போலீசார் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

author img

By

Published : Dec 24, 2022, 10:49 AM IST

சேலம் மாவட்டம் பனங்காடு அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 250க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் 5ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ஒருவர் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவிகள் கழிவறையில் இருக்கும் பகுதிக்கு சென்று எட்டி பார்த்ததாகவும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு ஆசிரியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் ஆசிரியரை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதன்பின் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: புகார் கொடுத்தவரை தரக்குறைவாக பேசிய போலீசுக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.