கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திடும் வகையில் தற்காலிக காய்கறி சந்தைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்த உழவர் சந்தை தற்பொழுது முனியப்பன் கோயில் திடலுக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இங்கு வரும் பொதுமக்களை பாதுகாத்திடும்வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப் பாதையை சேலம் ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து தற்காலிக சந்தையில் ஆய்வு மேற்கொண்டு காய்கறிகளின் விலையை அவர் கேட்டறிந்தார். அப்போது, அதிக விலைக்கு காய்கறிகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருட்களை வாங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’இவன் கரோனாவை பரப்ப வந்துருக்கான்’ - அச்சத்தில் இளைஞர் அடித்துக் கொலை