ETV Bharat / state

குறைந்த செலவில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் இளைஞர் சாதனை

கரானா நோயாளிகளுக்கு பயனுள்ள வகையில் குறைந்த செலவில் நவீன ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் பொறியியல் பட்டதாரி அசத்தியுள்ளார்.

salem-youth-achievement-by-developing-low-cost-oxygen-enrichment-machine
குறைந்த செலவில் ஆக்சிசன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் இளைஞர் சாதனை
author img

By

Published : May 19, 2021, 5:59 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர், சுப்பராயன் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). பொறியியல் பட்டதாரியான இவர், மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் உள்ள சிட்கோவில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மாசு அளவீடும் கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில், கரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாகுறையின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க குறைந்த விலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் நவீனக் கருவியை வடிவமைத்து அசத்தியுள்ளார் அசோக்குமார்.

கம்ப்ரஸர் மூலம் வெளிக்காற்றில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜனை உறிஞ்சி ஜியோ லைட் என்னும் வேதிப்பொருள் மூலம் ஆக்ஸிஜனை மட்டும் பிரித்தெடுத்து சுவாசக் கருவியினுள் செலுத்தி நுரையீரல் நன்றாக செயல்பட உதவும் வகையில் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவியில் ஒரு கிலோ ஜியோ லைட்டை பயன்படுத்துவதன் மூலம் 20 நாள் வரை ஆக்ஸிஜனை செறிவூட்ட முடியும். ஒரு நிமிடத்தில் 10 லிட்டர்வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும்.

குறைந்த செலவில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்கி சேலம் இளைஞர் சாதனை

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டியில் ஒரே நேரத்தில் மூன்று நோயாளிகளுக்கு சுவாசக் கருவியின் மூலமாக ஆக்ஸிஜன் செலுத்தமுடியும்.தற்போது ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வெளியில் இருந்து கொள்முதல் செய்ய ஒரு லட்சம் ரூபாய்வரை செலவாகிறது. ஆனால், அசோக்குமார் கண்டுபிடித்துள்ள இயந்திரமானது ரூ.25,000 முதல் ரூ.30,000வரை மட்டுமே தேவைப்படுகிறது.

இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவியின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆக்ஸிஜன உற்பத்தி செய்து கொடுக்க முடியும். இதன் மூலம் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றார். மேலும் அரசு தேவையான நிதி உதவி செய்தால் இன்னும் குறைந்த விலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சேலம் இரும்பாலையில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஒருவாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்'- அமைச்சர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.