சேலத்தில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாத நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசவுந்தரி, மகளிர் அமைப்பு, தொழிலாளர் இயக்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராகப் பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காகக் குழு அமைக்க வேண்டும் என்று விவாதத்தின் முடிவில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நல குழு தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்த விழிப்புணர்வை பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தை பாதுகாப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்’ என்றார்.
மேலும் படிக்க: ஆசிரியரைத் தாக்கிய பள்ளி மாணவர்கள்: ஆறு பேர் இடைநீக்கம்!